ஆஸ்திரேலியாவில் வரலாற்று சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து

 ஆஸ்திரேலியாவில் வரலாற்று சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. 71 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் இந்திய அணி தொடரை வென்றதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்த இந்திய அணிக்கும், கேப்டன் கோலிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பேட்டிங், பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட ஒட்டுமொத்த அணியின் சீரான முயற்சி நம்மை பெருமை கொள்ள வைத்திருக்கிறது” என்றார்.

Share It