இராணுவ காவல்துறையில் பெண்களுக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு – நிர்மலா சீதாராமன்

 இராணுவ காவல்துறையில் பெண்களுக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு – நிர்மலா சீதாராமன்

இந்திய இராணுவத்தில் பெண் காவல்துறையினருக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு செய்ய உள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் குறித்த அறிக்கையில் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

“இந்திய இராணுவத்தில் பெண்கள் அவசியம் பங்கெடுக்க வேண்டும். இராணுவத்துறையில் உள்ள காவல்துறை பிரிவில் பெண்களைச் சேர்க்க முடிவு செய்துள்ளோம். அதன்படி மொத்தமாக உள்ள வெற்றிடங்களில் 20 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.எனவே எதிர்காலத்தில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட இருக்கின்றன” என குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

Share It