கர்நாடகாவில் கடற்பகுதியில் படகு கவிழ்ந்து விபத்து நேரிட்டதில் 16 பேர் உயிரிழப்பு

 கர்நாடகாவில் கடற்பகுதியில் படகு கவிழ்ந்து விபத்து நேரிட்டதில் 16 பேர் உயிரிழப்பு

கர்வார் கடற்பகுதியில் 22 பேருடன் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுதொடர்பாக தகவல் அறிந்ததும் கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் சம்பவ இடத்திற்கு சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது 6 பேரது சடலம் மீட்கப்பட்டது என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியது.

இப்போது 16 பேர் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியை சேர்ந்த மீனவர்களும் மீட்பு பணிக்கு உதவி செய்து வருகிறார்கள். மீதம், உள்ளவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கர்வாரில் உள்ள கோவில் ஒன்றுக்கு சென்றுவிட்டு திரும்பும் போது இச்சம்பவம் நடைபெற்றுள்ளது என தெரியவந்துள்ளது.

Share It