ஜெனிவா பேரணிக்கு சென்ற வாகீசன் லண்டன் விமான நிலையத்தில் கைது

 ஜெனிவா பேரணிக்கு சென்ற வாகீசன் லண்டன் விமான நிலையத்தில் கைது

பிரித்தானிய கீத்துரோ விமானநிலையத்தில் வைத்து பறை இசைக்கலைஞன் வாகீசன் தங்கவேல் மற்றும் அவருடைய நண்பரும் நேற்று பிரித்தானிய தீவிரவாத எதிர்ப்புப் காவல்துறையின‌ரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஐநாவில் நடைபெற்ற தமிழின அழிப்பிற்கு எதிரான பேரணியில் பறை இசைப்பதற்காக ஜெனிவா சென்ற வேளையிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவரது கைப்பையில் இருந்த தமிழ்தேசிய கொடியை, தமிழீழ தேசிய கொடி என சந்தேகித்தே காவல்துறையின‌ர் கைது செய்திருக்க கூடும் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பின் மாலை 5 மணியளவில் தங்கவேலுடைய வீடு சோதனைக்குள்ளாக்கப்பட்டு மடிக்கணினி,ஆவணங்கள் மற்றும் வன்தட்டுக்கள் என்பன பறிமுதல் செய்யப்பட்டன. அதன் பின் மாலை 11மணியளவில் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

குறி்ப்பாக பிரித்தானிய இலங்கை தூதரகம் போராடும் தமிழ் மக்களை கண்காணிப்பதாக கூறிய சிலநாட்களிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த செயற்பாடானது புலம்பெயர் வாழ்தமிழ்மக்களை ஒரு அச்ச உணர்வில் வீழ்த்தி அவர்கள் தமக்கான போராட்டங்களை முன்னெடுப்பதை முடக்குவதற்கான சூழ்ச்சியாகவே இது காணப்படுகிறது.

Share It