டெல்லியில் அரசு அலுவலக வளாகத்தில் பயங்கர தீ விபத்து- சிஐஎஸ்எப் அதிகாரி உயிரிழப்பு

 டெல்லியில் அரசு அலுவலக வளாகத்தில் பயங்கர தீ விபத்து- சிஐஎஸ்எப் அதிகாரி உயிரிழப்பு

டெல்லியின் சிஜிஓ வளாகத்தில் உள்ள பண்டிட் தீன்தயாள் அந்தியோதயா பவன் கட்டிடம் உள்ளது. இதில் பல்வேறு மத்திய அரசு அலுலவகங்கள் செயல்படுகின்றன. இதில், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சக அலுவலகத்தில் இன்று காலை 8 மணியளவில் தீப்பிடித்தது. பின்னர் மளமளவென மற்ற இடங்களுக்கும் தீ பரவி கொளுந்துவிட்டு எரிந்தது.

இதையடுத்து அந்த கட்டிடத்தில் இருந்தவர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர். தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சுமார் 24 தீயணைப்பு வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கடுமையாகப் போராடி தீயை கட்டுப்படுத்தினர். மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதன்பின்னர் கட்டிடத்தை குளிர்விக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீயணைப்பு பணியின்போது கடுமையான புகை எழுந்தது. இந்த புகையை சுவாசித்ததால் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் சப்-இன்ஸ்பெக்டர் மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

Share It