நான் சில பெண்களுடன் டேட்டிங் சென்றிருக்கிறேன் அதுவெலாம் மீடூ இல்லை- நடிகர் விஷால்!

 நான் சில பெண்களுடன் டேட்டிங் சென்றிருக்கிறேன் அதுவெலாம் மீடூ இல்லை- நடிகர் விஷால்!

சென்னை: பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமென நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். திரைத்துறையில் பெண்கள் பாலியல் ரீதியாக வேட்டையாடப்படுவதாக சமீப காலங்களில் புகார்கள் அதிகரித்துள்ளன. மீடூ இயக்கத்தின் மூலம், பலரும் பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

இது குறித்து பேசியுள்ள விஷால் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என எந்த துறையாக இருந்தாலும், நடிகைகளுக்கு ஏதுவானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும். பயத்தினால் வேலை வாய்ப்பை இழப்பது நிறுத்தப்பட வேண்டும். அதேபோல் வாய்ப்புக்காக பெண்களை பணிய வைப்பது தடுக்கப்பட வேண்டும். இதை தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழி திரைத்துறையும் உறுதிசெய்ய வேண்டும் என்றார்.

பெண்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்பட வேண்டுமென நினைக்கிறீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு நிச்சயமாக செய்ய வேண்டும். என்னுடைய சண்டக்கோழி 2 திரைப்படத்தில் இருந்த இரண்டு கதாநாயகிகளின் பாதுகாப்பும் உறுதி செய்யபட்டது. என்னுடைய முதல் படத்திலும் நான் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தேன் என்றார். மேலும், குற்றவாலிகளை அடையாளம் காட்டுவதற்காக தொடங்கப்பட்ட மீடூ இயக்கம் சிலரின் தனிப்பட்ட காரணங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. காலம் தாழ்த்துதல், வாய்ப்பு தருவதாக உறுதியளித்துவிட்டு அது நடக்காமல் போனால் பழிவாங்குவதற்காக மீடூவை ஆயுதமாக எடுக்கும் நிலையும் உள்ளது. அது நிறுத்தப்பட வேண்டும். மனம் ஒத்து பழகுவதற்கும் ஒருவரை தவறாக உபயோகிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. நானும் சில பெண்களுடன் டேட்டிங் சென்றிருக்கிறேன், அதனால் அவர்களை தவறாக பயன்படுத்தினேன் என்று அர்த்தமில்லை என்றார்

Share It