நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் 635 பேருக்கு அப்பரென்டிஸ் பயிற்சி

 நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் 635 பேருக்கு அப்பரென்டிஸ் பயிற்சி

நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்எல்சி) நிறுவனத்தில் 635 பேருக்கு அப்பரென்டிஸ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி அக்டோபர் 25.

எந்தெந்த பிரிவுகள்: டெக்னீசியன் பிரிவில் 335 இடங்களும், பட்டதாரிகள் பிரிவில் 300 இடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி: டெக்னீசியன் பிரிவில் விண்ணப்பிப்போர் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், கெமிக்கல், கம்பியூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட டிப்ளமா இன்ஜினியரிங் பிரிவுகளில் 55 % மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பட்டதாரிகள் பிரிவில் விண்ணப்பிப்போர் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், கெமிக்கல், கம்பியூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் 55 % மதிப்பெண்களுடன் பி.இ. படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கடைசி தேதி: விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி அக்டோபர் 25. மேலும், விவரங்களுக்கு https://www.nlcindia.com/new_website/careers/NET-GAT-TAT-ADVERTISEMENT.pdf என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

Share It