நேற்றைய ஆட்டத்தால் பல சாதனைகளை படைத்த விராட் கோலி

 நேற்றைய ஆட்டத்தால் பல சாதனைகளை படைத்த விராட் கோலி

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நேற்று நாக்பூரில் இடம்பெற்ற ஒருநாள் போட்டியின் போது இந்திய அணித் தலைவர் விராட் காலி பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். நேற்றைய போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 250 ஓட்டங்களை பெற்றது.

இதில் இந்திய அணித் தலைவர் விராட் கோலி 120 பந்துகளை எதிர்கொண்டு 10 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 114 ஓட்டங்களை வித்தானர். இதனால் அவர் கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.

* சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தலைவனாக இருந்து 9 ஆயிரம் ஓட்டங்களை கடந்த 6 வீரர். இதற்கு முன் ரிக்கி பொண்டீங், கிரேம் ஸ்மித், ஸ்டீபன் பிளமிங், தோனி, ஆலன் போர்டர் ஆகியோர் இந்த சாதனையை புரிந்துள்ளனர்.

* தலைவராக இருந்து 9 ஆயிரம் ஓட்டங்களை விரைவாக குவித்த வீரர். இதற்கு முன் ரிக்கி பொண்டீங் 204 இன்னிங்ஸ்களில் 9 ஓயிரம் ஓட்டங்களை பெற்றிருந்தார். இந் நிலையில் கோலி 159 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை முறியடித்துள்ளார்.

* நாக்பூர் கிரிக்கெட் மைதானத்தில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர். இதற்கு முன் தோனி 268 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

* ஒருநாள் போட்டியில் 40 சதங்களுக்கு மேல் அடித்தவர்கள் பட்டியலில் சச்சினுடன் இணைந்துள்ளார்.

* நேற்றைய போட்டியில் 10 நான்கு ஓட்டங்களை விளாசினார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 1000 நான்கு ஓட்டங்களை பெற்றுள்ளார். இதற்கு முன் இந்தியாவின் சேவாக், சச்சின், கங்குலி ஆகியோர் 1000 நான்கு ஓட்டங்களுக்கு மேல் பெற்றிருந்தனர்.

* சொந்த மண்ணில் அதிக சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பெற்றார். (கோலி 18 சதம், சச்சின் 20 சதம்)

* அனைத்து சர்வதேச கிரிக்கெட்டி போட்டிகளிலும் 65 சதங்கள் பெற்றுள்ளார்.

* இந்த சதம் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 7 ஆவது சதத்தை பதிவு செய்துள்ளார்.

Share It