பிரச்சினைகளை தீர்க்க இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் : ஐநா வலியுறுத்தல்

 பிரச்சினைகளை தீர்க்க இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் : ஐநா வலியுறுத்தல்

இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள அர்த்தமான முறையில் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என நம்பிக்கை இருப்பதாக ஐக்கிய நாடுகள் அவை தலைவர் அண்டோனியா கட்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

நியூயார்க்கில் உள்ள ஐநா அலுவலகத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அண்டோனியோ கட்டர்ஸ் கூறியதாவது:- “ இந்தியாவும் பாகிஸ்தானும் அர்த்தமுள்ள வகையில் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. இருநாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு உதவ நான் தயாராக உள்ளேன்” என்றார்.

காஷ்மீரில் உள்ள நிலவரம் குறித்து பாகிஸ்தான் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கட்டர்ஸ், மனித உரிமை மீறல்கள் விவகாரத்தை பொறுத்தவரை, மனித உரிமைக்கான துணைத்தூதர் சமீபத்தில் விரிவான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார். எனவே, இந்த அறிக்கையின் அடிப்படையில் ஐநா செயல்படும்” என்றார்.

Share It