புதுடெல்லியில் ராகுல் காந்தியுடன் சந்திரபாபுநாயுடு சந்திப்பு

 புதுடெல்லியில் ராகுல் காந்தியுடன் சந்திரபாபுநாயுடு சந்திப்பு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபுநாயுடு புதுடெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது கொல்கத்தாவில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்திய பிரமாண்ட மாநாடு குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

சந்திரபாபு நாயுடு பங்கேற்ற அம்மாநாட்டில் சில கட்சிகள் ராகுல் காந்தி தலைமையை ஏற்க தயாராக இல்லை என்று கூறி வருகின்றன. இது தொடர்பாக இருவரும் விவாதித்தனர். மேலும் சந்திரபாபுநாயுடு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயையும் சந்தித்தார். அப்போது அமராவதியில் ஐகோர்ட்டு கட்டிட திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தார்.

Share It