மத்தியில் புதிய கூட்டணி- ஜெகன்மோகன் ரெட்டியுடன் சந்திரசேகர ராவ் மகன் சந்திப்பு

 மத்தியில் புதிய கூட்டணி- ஜெகன்மோகன் ரெட்டியுடன் சந்திரசேகர ராவ் மகன் சந்திப்பு

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்தியில் பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத கூட்டணியை உருவாக்கும் முயற்சியில், தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்காக திமுக தலைவர் ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் தேவகவுடா, உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகிய தலைவர்களை சந்தித்து பேசினார்.

இதன் தொடர்ச்சியாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தார். பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தனி குழுவையும் அமைத்தார். அதன்படி, தெலுங்கானா ராஷ்டிர சமிதி செயல் தலைவரும், சந்திரசேகர ராவின் மகனுமான கே.டி.ராமா ராவ் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், இன்று ஐதராபாத்தில் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து பேசினர்.

Share It