மன்னார் மனிதப் புதைகுழி எச்சங்களின் மாதிரிகள் புளோரிடாவில் ஒப்படைப்பு

 மன்னார் மனிதப் புதைகுழி எச்சங்களின் மாதிரிகள் புளோரிடாவில் ஒப்படைப்பு

மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. குறித்த மாதிரிகள் எந்த காலப்பகுதிக்குரியவை என்பதை உறுதிப்படுத்துவதற்கான கார்பன் பரிசோதனைகள் அங்கு மேற்கொள்ளப்படவுள்ளன.

மன்னார், சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 294 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் தெரிவு செய்யப்பட்ட 6 மாதிரிகள் மேலதிக ஆய்வுகளுக்காக அமெரிக்காவிற்கு எடுத்துச்செல்லப்பட்டன.

மன்னார், சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ, காணாமற்போனோர் அலுவலகத்தின் ஆணையாளர் மிராக் ரஹீம் உள்ளிட்ட குழுவினரால் இந்த மாதிரிகள் ஆய்வுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த எச்சங்களின் கார்பன் பரிசோதனை முடிவுகள் இன்னும் மூன்று வாரங்களுக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Share It