மன்னார் மனித எச்சங்களின் மாதிரிகள் கொழும்புக்கு இன்று கொண்டுவரப்படவுள்ளன

 மன்னார் மனித எச்சங்களின் மாதிரிகள் கொழும்புக்கு இன்று கொண்டுவரப்படவுள்ளன

அமெரிக்காவிற்கு அனுப்பிவைப்பதற்காக, மன்னார் மனித புதைகுழியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள், பலத்த பாதுகாப்புடன் கொழும்புக்கு கொண்டுவரப்படவுள்ளன. அதற்கமைய குறித்த மாதிரிகள் இன்று (புதன்கிழமை) முற்பகல் மன்னார் நீதிமன்றத்திலிருந்து கொழும்பு விமான நிலையத்திற்கு கொண்டுவரப்படவுள்ளன.

அதன்பின்னர் குறித்த எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவின் புலோரிடவிற்கு கார்பன் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்படவுள்ளன.இந்த பரிசோதனையின்போது, உயிரிழந்தவர்களின் வயது, எவ்வாறு உயிரிழப்பு இடம்பெற்றது மற்றும் எத்தனை வருடங்கள் இவை பழமையானது போன்ற முக்கியத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று அகழ்வுப் பணிகளுக்குப் பொறுப்பான சட்டவைத்திய அதிகாரி, சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மன்னார் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. மனித புதைகுழியிலிருந்து இதுவரை 300 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 23 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளன.

Share It