முதல் அமைச்சர் பழனிசாமியுடன் பாலகிருஷ்ண ரெட்டி சந்தித்து ஆலோசனை

 முதல் அமைச்சர் பழனிசாமியுடன் பாலகிருஷ்ண ரெட்டி சந்தித்து ஆலோசனை

தமிழக விளையாட்டு துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டிக்கு, கடந்த 1998ம் ஆண்டு பேருந்து ஒன்றின் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரத்து 500 அபராதமும் விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது. அதன்பின் அவருக்கு அவருக்கு ஜாமீனும் வழங்கப்பட்டது.

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதுள்ள வழக்குகளை விசாரணை மேற்கொள்ளும் சிறப்பு நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கி உள்ளது. இதனை தொடர்ந்து அவரது அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. பதவி பறிபோகும் சூழ்நிலை எழுந்துள்ளது. இந்த சிறை தண்டனைக்கு பின்பு 6 ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது. இதனால் இந்த தீர்ப்பினை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய கூடும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதல் அமைச்சர் பழனிசாமியை பாலகிருஷ்ண ரெட்டி சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த சந்திப்பில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.

Share It