யுத்தக்குற்றச்சாட்டு விசாரணைகள் இடம்பெறுவதாக இருந்தால் உள்நாட்டிலே இடம்பெறும்: அஜித் பி.பெரேரா

 யுத்தக்குற்றச்சாட்டு விசாரணைகள் இடம்பெறுவதாக இருந்தால் உள்நாட்டிலே இடம்பெறும்: அஜித் பி.பெரேரா

யுத்தக்குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் இடம்பெறுவதாக இருந்தால் உள்நாட்டிலே இடம்பெறும். இராணுவத்தினரை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்போவதாக எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தில் எந்த உண்மையும் இல்லை என அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பி,பெரேரா தெரிவித்தார்.

பாராளுமன்றம் இன்று பிரதி சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போது ஆரம்ப நிகழ்வுகள் நிறைவடைந்த பின்னர் வெளிவிவகார அமைச்சரால் முன்வைக்கப்பட்ட இராஜாந்திர சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், ராஜதந்திர பதவிகளுக்கு தகுதியற்றவர்கள் நியமிக்கப்பட்டிருப்பது தொடர்பில் எங்களுக்கு பிரச்சினை இருக்கின்றது. இதனால் நாட்டின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. அதனால் அரச சேவையில் அனுபவம்வாய்ந்த நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தகுதியானவர்கள் எதிர்காலத்தில் இராஜதந்திர தூதுவர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Share It