தொடங்கியது பெண்களை பாதுகாக்கும் 181 சேவை. அனைவர்க்கும் சென்றடைய அதிகம் பகிரவும்

 தொடங்கியது பெண்களை பாதுகாக்கும் 181 சேவை.  அனைவர்க்கும் சென்றடைய அதிகம் பகிரவும்

சென்னை: தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்காக 181 என்ற இலவச தொலைபேசி சேவை தொடங்கப்பட்ட 10 நாளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் பாதுகாப்புக்காக 181 என்ற இலவச தொலைபேசி சேவையை 4 ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த சேவை, டெல்லி,குஜராத்தை தொடர்ந்து கடந்த 10 ம் தேதி தமிழகத்திலும் விரிவுப்படுத்தப்பட்டது. இந்த மையத்தை நிர்வகிக்க ஐந்து வழக்கறிஞர்கள், ஐந்து மனநல ஆலோசகர்கள், ஒரு தகவல் தொழில்நுட்ப வல்லுநர் என பணியமர்த்தப்பட்டுள்ளனர். தவிர, இந்த மையத்துடன் காவல்துறை, மருத்துவம், சட்ட உதவிகள், கவுன்சிலிங் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

சென்னை, அம்பத்துாரில் உள்ள, ‘அம்மா கால் சென்டர்’ உதவியுடன், இந்த சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. 181 எண்ணிற்கு வரும் அழைப்புகள் குறித்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. போலீசார், பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டு, காப்பகங்களில் தங்க வைத்து, மனநலம், மருத்துவம் மற்றும் சட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

தினமும் 700 முதல் 1000 அழைப்புகள் வருவதாகவும் இவற்றில், அதிகபட்சமாக கணவன் மது அருந்துவிட்டு கொடுமைபடுத்துவது, குழந்தைகள், மனைவியுடன் கணவர் நேரம் ஒதுக்குவதில்லை, பெற்றோரை மகன் அல்லது மகள் கவனிப்பதில்லை உட்பட குடும்ப வன்முறையால் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தாங்கள் சந்திக்கும் பாதிப்புகளை அதிக அளவில் பெண்கள் தெரிவித்து வருவதாக அங்குள்ள அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், கவுன்சிலிங் மூலம் பிரிந்திருந்த ஒரு சில தம்பதிகளை இணைத்து வைத்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

அதே போல், அரசின் நலத்திட்ட உதவிகள் தொடர்பான தகவல்களை பெறுவது உள்ளிட்ட அழைப்புகளும் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share It