இன்னொரு ஆஸ்கார் விருது வாங்கிய தமிழன் அருணாச்சலம் முருகானந்தம்.

 இன்னொரு ஆஸ்கார் விருது வாங்கிய தமிழன் அருணாச்சலம் முருகானந்தம்.

சென்னை: உலகமே கொண்டாடும் ஆஸ்கர் நாயகன் அருணாச்சலம் முருகானந்தம் என்று ஒருவர் இருப்பது கோலிவுட்காரர்களுக்கு மட்டும் தெரியவில்லை. கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் மாதவிடாய் காலத்தில் பெண்கள் படும் அவதியை பார்த்து குறைந்த விலையில் நாப்கின் தயாரிக்கும் எந்திரத்தை கண்டுபிடித்தார். குறைந்த விலையில் நாப்கின் செய்வதை ஒரு சேவையாக செய்து வருகிறார் அவர்.

இந்தி பேட்மேன்
தமிழனை பற்றிய படம் என்று ஒதுக்காமல் இந்தி பேசுபவர்கள் அதை ஹிட்டாக்கினார்கள். அதை பார்த்தும் பார்க்காதது போன்று முகத்தை திருப்பிக் கொண்டது கோலிவுட்.

பீரியட்
அருணாச்சலம் முருகானந்தம் பற்றிய குறும்படமான பீரியட் என்ட் ஆப் சென்டன்ஸுக்கு சிறந்த குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. வெளிநாட்டுக்காரர்களுக்கு எல்லாம் நம் அருணாச்சலத்தின் அருமை தெரிந்து பாராட்டுகிறார்கள்.

அர்ஜுன் ரெட்டி
கோலிவுட்காரர்களோ அருணாச்சலம் முருகானந்தம் என்று ஒருவர் இருப்பதை கண்டுகொள்ளவே மாட்டோம் என்ற முடிவில் உள்ளனர். அர்ஜுன் ரெட்டி ரீமேக் நன்றாக வராவிட்டால் அதை தூக்கி குப்பையில் போட்டுவிட்டு மீண்டும் எடுத்தாலும் எடுப்போமே தவிர இந்த அருணாச்சலத்தை பற்றி எல்லாம் படம் எடுக்க மாட்டோம் என்று ஒரு முடிவோடு உள்ளது கோலிவுட்.

Share It