“உங்களிடமிருந்து ஏன் நாங்கள் ஒதுங்கியே இருக்கிறோம்?” செண்டினல் சார்பாக ஒரு கடிதம்!

 “உங்களிடமிருந்து ஏன் நாங்கள் ஒதுங்கியே இருக்கிறோம்?” செண்டினல் சார்பாக ஒரு கடிதம்!

அன்பார்ந்த வெளியுலகுக்கு இன்னமும் ‘நாகரிகமடையாத’ செண்டினல் மக்கள் சார்பாக எழுதுவது,

நீங்கள் பல வருடங்களாக எங்களைத் தொடர்புகொள்ள விரும்புகிறீர்கள்.

எதற்கு? செண்டினல் தீவுக்கு நீங்கள் வரத் துடிப்பது ஏன்?

எங்களுக்கு உதவப்போவதாகச் சொல்கிறீர்கள். எங்களிடம் பல ஆயிரம் வருடங்களாகப் புதைந்திருக்கும் மனிதகுல வரலாற்றைப் புரிந்துகொள்ள முயல்வதாகச் சொல்கிறீர்கள்.

என்ன உதவிகளைச் செய்வீர்கள்? மனிதகுல வரலாற்றைப் புரிந்துகொண்டு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

இதையெல்லாம் நீங்கள் செய்வது எங்கள் வாழ்வியலைச் சிறப்பிக்கவா? ஆனால், இப்போதே நாங்கள் நன்றாகத்தானே வாழ்கிறோம். எங்கள் சுதந்திரத்துக்கு எப்போதும் இடைஞ்சல் செய்துகொண்டே இருப்பதன் காரணம்தான் என்ன?

இன்று நீங்கள் வாழும் உங்கள் வீடு, உங்களுடைய நிலம் எதுவும் நாளை உங்களுக்குச் சொந்தமில்லை என்று கூறினால் ஏற்றுக்கொள்வீர்களா? நீங்கள் உண்டு உறங்கிக் கொண்டிருந்த இடம், ஆனந்தமாக உலவித்திரிந்து இயற்கையின் எண்ணற்ற பொக்கிஷங்களைக் கண்டு கற்றுணர்ந்த அமைதியான வாழ்வியலைச் சுமந்திருந்த இடம் நாளை சாலையாகவோ ஒரு தொழிற்சாலையாகவோ மாறினால்?

Photo Courtesy: Maurice Vidal Portman (1861-1935)

“;இப்படியெல்லாம் நடக்கவா போகிறது!”; என்று நீங்கள் சொல்வீர்களேயானால் எங்களைப் போன்ற பழங்குடிகள் உங்களோடு தொடர்பு வைத்துக் கொண்டபோது நடந்தவற்றைப் பாருங்கள். அப்படியும் நடக்குமென்பதும் அதைவிட மோசமாகக்கூட நடக்குமென்பதும் புரியும். காலம் காலமாகத் தலைமுறைகள் தழைத்தோங்கிய நிலப்பகுதியைப் பிடுங்கும்போது அவர்களது அடையாளமும் அந்த நிலத்தில் நீங்கள் கட்டும் கட்டடத்துக்கான அஸ்திவாரத்தோடு புதைந்துவிடுகிறது.

நிலம் என்பது வாழ்க்கையை ஓட்டுவதற்குத் தேவைப்படும் ஓர் இடம் மட்டுமல்ல. இது ஓர் இனத்தின் வரலாறு. இங்குதான் எங்களின் மூதாதையர்கள் கலாசாரத்தை, அவர்கள் பின்பற்றிய பண்பாட்டை வளர்த்தெடுத்தனர். அந்தக் கலாசாரத்தை, அவர்களின் நடைமுறைகளைக் காலம் காலமாகக் காப்பாற்றி வருவது நுற்றாண்டுகள் பழமைகொண்ட இந்த வாழிடமும் அதைச் சார்ந்துள்ள எங்கள் வாழ்வியலும் மட்டுமே. அதை நாங்கள் மாற்றிக்கொண்டால் இடத்துக்குத் தக்கவாறாக எங்கள் தொழிலையும் மாற்றவேண்டும். அல்லது உங்கள் பேச்சைக் கேட்டுத் தொழிலை மாற்றினால் தொழிலுக்குத் தகுந்தவாறாக இடத்தை மாற்றவேண்டும். இரண்டில் எதைச் செய்தாலும் எங்கள் இனத்தின் தனிச்சிறப்புகளை இழந்துவிடுவோம். அந்த ஆபத்தை உணர்ந்த நாங்கள் எதையும் மாற்ற விரும்பவில்லை.

நம் மூதாதையர்களின் வரலாற்றைச் சுமந்து வாழ்ந்துகொண்டிருக்கும் வாழும் பதிவுகளான எங்களில் (பழங்குடிகளில்) தற்போது உலகளவில் 37 கோடி பேர் மேற்குறிப்பிட்ட இன்னல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் எங்களுக்கு மட்டும் உங்களால் என்ன நன்மைகளைச் செய்துவிட முடியும்?

எங்களோடு இந்தத் தீவில் பல்லாயிரம் வருடங்களாக வாழ்ந்துவந்த சில இனங்களுக்கு நீங்கள் செய்த ‘நன்மைகளை’ உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். அதன்மூலம் எங்கள் இந்த அணுகுமுறைகள் ஏனென்று புரிந்துகொள்ளக் கொஞ்சம் முயலுங்கள்.

அகா-காரி, அகா-கோரா, அகா-போ, அகா-ஜெரு போன்றவர்களைக் கூட்டாகச் சேர்த்து அந்தமானியப் பழங்குடியினம் என்கிறீர்கள். ஆனால் எங்களுக்கு அவர்கள் ஒவ்வொருவரின் தனித்த ஆதி அடையாளங்களும் தெரியும். தெரிந்திருந்து என்ன பிரயோஜனம், அத்தனை பேரையும் சேர்த்து அவர்களின் மொத்த எண்ணிக்கை இப்போது எவ்வளவு தெரியுமா? அதிகபட்சம் ஐம்பது முதல் அறுபது பேர் மட்டுமே இருப்பார்கள். அதுவும் காரி, ஜெரு மக்கள் மட்டுமே. இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பே கோரா இனம் முற்றிலும் அழிந்துவிட்டது. எட்டு வருடங்களுக்குமுன் இறந்த போ இனத்தின் கடைசிப் பெண்மணியோடு அந்த இனமும் அவர்களின் மொழியும் அழிந்துவிட்டன.

முன்பே பல நூற்றாண்டுகளாகப் பல கடற்கொள்ளையர்கள் கடத்தல்காரர்களால் நாங்கள் தாக்குதல்களுக்கு உள்ளானோம். அதில் வேற்று மனிதர்கள் மீது ஒருவித பயமும் ஆபத்துணர்வுமே மேலோங்கியிருந்தது. அதைப் போலவே இருநூறு ஆண்டுகளுக்குமுன் வெள்ளைத் தோலோடு இருந்த சிலர் எங்கள் தீவில் கத்தி, துப்பாக்கிகளோடு கரையிறங்கினார்கள். ஆயுதங்களோடு வருபவர்களைப் பார்த்த எங்களுக்கு முதலில் எழுந்தது தற்காப்பு உணர்வே. அவர்களைத் தாக்கினோம். அதில் எங்களால் அவர்களில் சிலர் கொல்லப்பட்டார்கள். பல்லாண்டு காலமாக வேற்று நிலத்தவர்களால் கொலைகளையும், வன்கொடுமைகளையும் மட்டுமே அனுபவித்த எங்களுக்கு அதுதான் சரியாகத் தோன்றியது. அதற்குப் பழிவாங்க எங்கள் இனத்தில் நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்று குவித்தார்கள்.

அந்நியர்களிடம் ஆதிக்கவெறியையும் அதன் விளைவாக ரத்தக் கரைகளையும் கடற்கரை முழுக்கப் பரவிய ரத்த வாடையையும் மட்டுமே பரிசாகப் பெற்ற எங்களுக்கு அது பழகிவிட்டது. ஆனால் அவர்கள் கொண்டுவந்த தேங்காய்,

Share It