இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா பந்து வீச்சில் சந்தேகம்- ஐசிசி

 இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா பந்து வீச்சில் சந்தேகம்- ஐசிசி

இலங்கை சுழற்பந்து வீச்சாளரான அகிலா தனஞ்ஜெயா பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக ஐசிசி தெரிவித்துள்ளது. இதனால் பரிசோதனைக்கு உட்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா. இவர் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறார். இந்நிலையில் அவரது பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தனஞ்ஜெயா இன்னும் 14 நாட்களுக்குள் தனது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். ஐசிசியின் ஆய்வு முடிவு வெளிவரும் வரை சர்வதேச போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளது.

Share It