தமிழ்நாடு ஐ.சி.டி.எஸ்-இல் 178 காலிப் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

 தமிழ்நாடு ஐ.சி.டி.எஸ்-இல் 178 காலிப் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பாக அனைத்து மாநிலங்களிலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் (ஐ.சி.டி.எஸ்) செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நலிவடைந்த பிரிவினருக்கு ஆரம்ப சுகாதாரம், கல்வி உள்ளிட்டவற்றை உறுதிப்படுத்துவதில், இந்த அமைப்பு சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு ஐ.சி.டி.எஸ். அமைப்பில் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் 178 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

யார் யார் விண்ணப்பிக்கலாம்?

ராமநாதபுரம், திருச்சி, கன்னியாகுமரி, நெல்லை, திருவள்ளூர், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் இந்த இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

எவ்வளவு காலியிடம்?

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (டெக்னிக்கல்) பிரிவில் 6 இடங்களும், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உதவியாளர் பிரிவில் 6 இடங்களும், வட்டார ஒருங்கிணைப்பாளர்(டெக்னிக்கல்) பிரிவில் 83 இடங்களும், வட்டார திட்ட உதவியாளர் பிரிவில் 83 இடங்களும் உள்பட மொத்தம் 178 பணியிடங்கள் உள்ளன.

வயதுவரம்பு: மேற்கண்ட அனைத்து பிரிவுகளுக்கும் விண்ணப்பிப்பவர்களின் வயது 35-க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: மேற்கண்ட அனைத்து பிரிவுகளுக்கும் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: அக்டோபர் 24. மேலும் விவரங்களுக்கு, http://icds.tn.nic.in/Notification.pdf என்ற வலைதளத்தை பார்க்கவும்.

Share It