ஜானி vs துப்பாக்கி முனை: வாரிசுகளின் பலப்பரீட்சை

 ஜானி vs துப்பாக்கி முனை: வாரிசுகளின் பலப்பரீட்சை

Johnny vs Thuppakki Munai: கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு முன்னோட்டமாக டிசம்பர் 14-ம் தேதியே புதிய திரைப்படங்கள் ரிலீஸாக இருக்கின்றன. அவற்றில் வாரிசுகள் இருவரின் படங்கள் முட்டுவது சுவாரசியம்! அந்த வாரிசுகள் சிவாஜி குடும்ப வாரிசான விக்ரம் பிரபுவும், தியாகராஜனின் மகனான பிரஷாந்தும்தான்!

தமிழ் சினிமாவில் கடந்த மூன்று தலைமுறைகளில் தொடர்ந்து கதாநாயக அந்தஸ்தை தக்கவைத்திருக்கும் ஒரே குடும்பம் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் குடும்பம். சிவாஜிகணேசன், பிரபு ஆகியோர் கடந்த இரண்டு தலைமுறையாக தமிழ் சினிமாவில் மிகப்பிரதானமான இடங்களில் இருந்தவர்கள். தற்போது இளம் கதாநாயகன் விக்ரம்பிரபு முன்னணிக்கு வர முயன்றுக்கொண்டிருப்பவர்.

அதேபோல் கடந்த தலைமுறையில் ஆக்க்ஷன் நாயகர்களில் குறிப்பிடத் த‌குந்த இடத்திலிருந்தவர் நடிகர் தியாகராஜன். இவரின் மலையூர் மம்பட்டியான் படம், தலைமுறைகளை தாண்டிய வெற்றிப்படமாக இன்றளவும் போற்றப்படுகின்றது. இவரின் மகன் பிரஷாந்த் இவர் கடந்த இருபது வருடங்களாக இளம் தலைமுறையில் உச்சத்தையும் பார்த்தவர், தோல்வியையும் பார்த்தவர்.

சமீபகாலமாக பிரஷாந்த் தன்னுடைய சினிமா கேரியரில் பெஸ்டாக இருகும்படியான படம் கொடுக்க முயன்று கொண்டிருக்கின்றார். அந்த வகையில்தான் அவர் நடிப்பில் ஜானி திரைப்படம் டிசம்பர் 14 அன்று வெளியாகிறது. அதே நாளில் விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனையும் களம் இறங்குகிறது. துப்பாக்கி முனை படத்தை இயக்குபவர், பிரபல கதாசிரியர் அன்னக்கிளி செல்வராஜின் மகன் தினேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே வாரிசுகளின் போட்டியாக வரும் வெள்ளிக்கிழமை அமைந்துள்ளது.

Share It