மிகப்பெரிய பம்பர் ஆப்பரை அறிவித்த ஜியோ: தினமும் 25ஜிபி டேட்டா ப்ரீ!

 மிகப்பெரிய பம்பர் ஆப்பரை அறிவித்த ஜியோ: தினமும் 25ஜிபி டேட்டா ப்ரீ!

ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்பெரும் வகையில், மிகப்பெரிய பம்பர் ஆப்பரை அறிவித்துள்ளது.

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தினமும் 25ஜிபி டேட்டாவை வரை பெற முடியும். நீங்கள் இப்போது உடனே குஷியாகி இருப்பீர்கள் என்று நன்றாக தெரியும்.

ஜியோ நிறுவனம்:
ஜியோ நிறுவனம் பல்வேறு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வாரி குவித்து வருகின்றது. இதில் ஏராளமான வாடிக்கையாளர்கள் ஜியோ நிறுவனத்தில் இணைந்து வருகின்றனர்.

ரிலையன்ஸ் ஜியோ கொண்டாட்டம் பேக்:
தற்போது இந்த ஆப்பரை தனது வாடிக்கையாளர்களுக்காக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் தினமும் 25ஜிபி டேட்டாவை 3 மாதத்திற்கு வழங்கப்படுகின்றது. இதில் முற்றிலும் இலவசமாகும். இதனால் இன்டர் நெட் பயனர்கள் படுகுஷியடைந்துள்ளனர். தினசரி நாம் 25ஜிபியை உபயோகிக்க முடியும்.

ஜூன் 30ம் தேதி வரை சலுகை:
இதன்படி ஜியோ வாடிக்கையாளர்கள் வரும் ஜூன் 30ம் (2019) வரை இலவச சேவையை பெற முடியும். இந்த ஜியோ கொண்டாட்ட பேக்கில் கூதலாக 25ஜிபி பெற முடியும். இதன் மூலம் நாம் இலவசமாக டேட்டாவை பெற முடியும்.

எவ்வாறு ஆக்டிவேட் செய்து:
ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை பெற எந்த செலவும் செய்ய வேண்டியதில்லை. உடனடியாக மைஜியோவுக்கு சென்று ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்.

பிரீமியம் உறுப்பினர் சலுகை:
இதில் உள்ள பிரீமியம் உறுப்பினர் சலுகையை உடனடியாக தேர்வு செய்து கொண்டால் தினமும் 25ஜிபி வரை இலவச டேட்டா கிடைக்கும். மேலும் வரம்பற்ற அழைப்புகளையும் பெற முடியும்.

Share It