நெல் ஜெயராமனின் கடைசி நாட்கள்.. உயிர் காக்க போராடிய சிவகார்த்திகேயன்.. நெகிழ வைக்கும் தகவல்கள்

 நெல் ஜெயராமனின் கடைசி நாட்கள்.. உயிர் காக்க போராடிய சிவகார்த்திகேயன்.. நெகிழ வைக்கும் தகவல்கள்

சென்னை:
இயற்கை விவசாயத்தை ஊக்குவித்த நெல் ஜெயராமனை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்ததே நடிகர் சிவகார்த்திகேயன்தானாம். அது மட்டுமல்லாமல் அவரது மருத்துவ செலவுகளையும் ஏற்று இன்று அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்லும் செலவையும் அவர் ஏற்றுள்ளார்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர் ஜெயராமன். கூலித் தொழிலாளியான இவர் 174 வகையான நெல் மாதிரிகளை கண்டுபிடித்தார். பின்னர் 12 ஆண்டுகளாக நெல் திருவிழாவை நடத்தி இயற்கை விவசாயத்துக்கு மாற்றினார்.

அப்பல்லோ
கடந்த இரு ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதை அறிந்த நடிகர் சிவகார்த்திகேயன் அவரை சொந்த ஊரில் இருந்து அழைத்து வந்து சென்னை தேனாம்பேட்டை அப்பல்லோவில் சேர்த்தார்.

மோசம்
பின்னர் அங்கு சிகிச்சைக்கான முழு செலவையும் அவர் ஏற்றார். இந்த நிலையில் நேற்று மாலை நெல் ஜெயராமனின் உடல்நிலை மோசமடைந்தது.

மரணம்
இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

பயண செலவை
அவரது உடல் சென்னை தேனாம்பேட்டையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதையடுத்து உடல் வேன் மூலம் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதற்கான பயண செலவையும் சிவகார்த்திகேயனே ஏற்கிறார்.

Share It