பாகிஸ்தான் சென்று விளையாட மாட்டோம்- டி வில்லியர்ஸ், ஸ்மித்

 பாகிஸ்தான் சென்று விளையாட மாட்டோம்- டி வில்லியர்ஸ், ஸ்மித்

பாகிஸ்தான் சூப்பர் லீக் 2019 சீசனில் பாகிஸ்தானில் நடைபெறும் ஆட்டங்களில் பங்கேற்கமாட்டோம் என்று டி வில்லியர்ஸ், ஸ்மித் தெரிவித்துள்ளனர்.

இந்திய பிரிமீயர் லீக், பிக் பாஷ், கரிபியன் பிரிமீயர லீக் டி20 கிரிக்கெட் தொடரை போல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை நடத்தி வருகிறது. பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்திருந்த இலங்கை வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் இருந்து வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தான் சென்று விளையாட அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் பாகிஸ்தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் லீக்கை நடத்தி வருகிறது. சொந்த நாட்டில் மீண்டும் கிரிக்கெட் போட்டி நடைபெற வேண்டும் என்பதற்காக இறுதிப் போட்டி, பிளே-ஆப்ஸ் போட்டிகளை பாகிஸ்தான் மண்ணில் நடத்தி வருகிறது. 2019 சீசனில் பெரும்பாலான ஆட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது.

தென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி வீரரான ஏபி டி வில்லியர்ஸ் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இதனால் அவருக்கு ஓய்வு அதிக அளவில் உள்ளது.

Share It