வங்கக்கடலில் புயல் சின்னம் – 15, 16ந்தேதிகளில் கன மழை எச்சரிக்கை

 வங்கக்கடலில் புயல் சின்னம் – 15, 16ந்தேதிகளில் கன மழை எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக 15, 16-ந்தேதிகளில் சென்னை மற்றும் வட தமிழகத்தில் மிதமான மழையும் ஓரிரு இடங்களில் மிக கன மழையும் பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டி இந்தியப் பெருங்கடல் பகுதியில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவுகிறது.

அடுத்த 24 மணி நேரத்தில் இது காற்றழுத்தமாகவும் 15-ந்தேதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாகவும் (புயல் சின்னம்) மாறி தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகம் நோக்கி நகரும்.

இதன் காரணமாக 15, 16-ந்தேதிகளில் 2 நாட்களுக்கு சென்னை மற்றும் வட தமிழகத்தில் மிதமான மழையும் ஓரிரு இடங்களில் மிக கன மழையும் பெய்யும்.

மீனவர்கள் இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கும், நாளை (13-ந்தேதி) தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிக்கும், 15-ந்தேதி தென்மேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிக்கும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம், ஆழ்கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருக்கும் மீனவர்கள் இன்று மாலைக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் புயலாக மாறி 15-ந்தேதி சென்னையை நெருங்கும் என்றும் 16-ந்தேதி வடக்கு நோக்கி நகர்ந்து அன்று இரவு 10 மணிக்கு மேல் நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்துக்கும் இடையே கரையை கடக்கும் என்றும் தனியார் வானிலை அமைப்புகள் தெரிவித்து உள்ளன.

Share It