டைம் டிராவலை நம்பவைக்கும் திகிலூட்டும் அனுபவங்களும் ஆதாரங்களும்.!

 டைம் டிராவலை நம்பவைக்கும் திகிலூட்டும் அனுபவங்களும் ஆதாரங்களும்.!

‘டைம் டிராவல்’தனை (Time Travel) சாத்தியப்படுத்தும் அல்லது அதை அடைவதற்கு கருதுகோளாக இருக்கும் எந்தவொரு தொழில்நுட்ப சாதனத்தையும் ‘பொதுவாக’ டைம்மெஷின் (Time Machine) என்றே குறிப்பிடுகிறார்கள்.

9-ஆம் நூற்றாண்டில் இருந்தே டைம் டிராவல் என்பதின் மையக்கரு உருவாகிவிட்டது என்று கூறப்பட்டாலும் பண்டையகால புராண கதைகளிலும், நாட்டுப்புற கதைகளிலும் கூட முன்னோக்கி பயணிக்கும் ஆர்வம் கொண்டவைகளாக இருந்திருக்கின்றன என்பது தான் நிதர்சனம், மகாபாரதம் உட்பட..!

தொடர்பு : பில்லி மையர் (Billy Meier) – டைம் டிராவலை மட்டுமின்றி அது ஏலியன்களோடும் பறக்கும் தட்டுகளோடும் தொடர்புடையது என்று நம்புபவர்.

பின்னோக்கி : பறக்கும் தட்டுகளை கண்டது மட்டுமின்றி அதில் பயணித்து டைனோஸர்கள் வாழ்ந்த காலத்திற்கு பின்னோக்கி பயணித்துள்ளார்.

புகைப்படம் : தனது இந்த டைம் டிராவல் அனுபவத்தை நிரூபிக்கும் வகையில் இறக்கை கொண்ட டைனோஸர்கள் பறப்பதை புகைப்படம் எடுத்து ஆதாரமாய் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டைனோஸர் கதை : ஆனால், பில்லி மையரின் புகைப்பட ஆதாரமானது டைனோஸர் கதை சார்ந்த புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்று விமர்சிக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

2036 : 1970-களில், ஜான் டிட்டர் (John Titor) என்பவர் தான் 2036 ஆம் ஆண்டில் இருந்து பின்னோக்கி பயணித்து வந்தவன் என்று கூறிக்கொண்டார்.

கணினி : அழிவிலிருந்து அவரது வயதை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக கணினி ஒன்றை தேடி பின்னோக்கி பயணித்து வந்ததாக அவர் காரணம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டுப் போர் : அது மட்டுமின்றி 2004 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் நிகழும் போன்ற வாருங்காலத்தைப் பற்றியும் சில விடயங்களை அவர் கூறினார்.

பரவெளி : தன் சமையல் அறையின் கீழ் தண்ணீர் ஓடுவதை கண்டப்பின்பு தான் ஒரு பரவெளியில் விழுந்து விட்டதாக கூறினார் சுவீடன் நாட்டை சேர்ந்த அகன் நோர்ட்விஸ்ட் (åkan Nordkvist)

வயதான மனிதர் : பரவெளி ‘சின்க்’ வழியாக விழுந்தெழுந்த பின் வயதான மனிதர் ஒருவரை கண்டுள்ளார், பின் அவர் தன்னை தான் காண்கிறார் என்று புரிந்து கொண்டுள்ளார்.

Share It